பெற்றோலிய களஞ்சிய விநியோகம் தொடர்பான கணக்காய்வு அறிக்கையை ஆராய்கிறது கோப் குழு!

Tuesday, January 19th, 2021

இலங்கையில் பெற்றோலியத்தை களஞ்சியப்படுத்தல் மற்றும் விநியோகித்தல் தொடர்பான விசேட கணக்காய்வு அறிக்கை குறித்து கோப் எனப்படும் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவில் இன்று ஆராயப்பட்டுள்ளதாக கோப் குழுவின் தலைவர் பேராசிரியர் சரித ஹேரத் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய இலங்கையில் பெற்றோலியத்தை களஞ்சியப்படுத்தல் மற்றும் அதனை விநியோகிப்பதில் காணப்படும் பிரச்சினைகள் குறித்துக் கலந்துரையாடுவதற்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் அதிகாரிகள் இன்று கோப் குழுவில் முன்னிலையாகவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொவிட் 19 தொற்று காரணமாக சுகாதார வழிகாட்டல் விதிமுறைகளை முறையாக பின்பற்றி கோப் குழு இன்றைய தினம் கூடவிருப்பதாகவும் சரித ஹேரத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்து..

Related posts: