பெற்றோலிய உற்பத்தி நாடுகளின் நிறுவனங்களுக்கு இலங்கையில் எரிபொருள் இறக்குமதி – விற்பனைக்கு வாய்ப்பளிக்க அமைச்சரவை அங்கீகாரம்!

எரிபொருள் உற்பத்தி செய்யும் நாடுகளின் நிறுவனங்கள் இலங்கையில் எரிபொருளை இறக்குமதி செய்யவும், சில்லறை விற்பனையில் ஈடுபடுவதற்கும் வாய்ப்பளிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர முன்வைத்த யோசனைக்கே இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இலங்கையின் மொத்த எரிபொருள் தேவையில் 90 சதவீதத்தினை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் பூர்த்திசெய்வதுடன், மிகுதி 10 சதவீதத்தினை லங்கா ஐஓசி நிறுவனம் ஈடுசெய்கிறது.
தற்போது, நாடு எதிர்நோக்கியுள்ளது அந்நிய செலாவணி நெருக்கடி காரணமாக தொடர்ச்சியாக எரிபொருள் தேவையினை பூர்த்திசெய்வது சவாலுக்குரிய செயற்பாடாகியுள்ளது.
இந்த நிலையில், எரிபொருள் உற்பத்திசெய்யும் நாடுகளில் உள்ள, பெற்றோலிய வள நிறுவனங்களுடன் நீண்ட கால ஒப்பந்தங்களை மேற்கொண்டு, இலங்கையின் அந்நிய செலாவணி தொடர்பான சிக்கல்கள் ஏற்படாதவாறு, எரிபொருள் இறக்குமதி செய்து, விற்பனை செய்வதற்கு அந்நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களை மேற்கொள்வது பொருத்தமானது என கண்டறியப்பட்டது.
அதற்கமைய, முறைசார் பொறிமுறையின் கீழ் எரிபொருள் நிறுவனங்களுடன் நீண்ட கால ஒப்பந்தங்களை மேற்கொண்டு, இலங்கைக்கு எரிபொருள் இறக்குமதி, பங்கீடு மற்றும் விநியோகம் செய்வதற்கு குறித்த நிறுவனங்களுக்கு வாய்ப்பளிக்க மின்சக்தி மற்றும் வலுசக்தி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது..
000
Related posts:
|
|