பெற்றோலியத் தொழிற்சங்கத்தின்  பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது!

Thursday, February 22nd, 2018

பெற்றோலியத் தொழிற்சங்கம் இன்று(22) காலை முதல் முன்னெடுக்கப்பட இருந்த பணிப்புறக்கணிப்பினை கைவிட்டுள்ளதாக பெற்றோலிய தொழிற்சங்க ஒன்றியத்தின்ஊடகப் பேச்சாளர் பந்துல சமன் குமார தெரிவித்துள்ளார்.

அதிகாரிகளுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தமது சம்பள உடன்படிக்கைக்கு ஏற்ப அதிகரிக்கப்பட்ட சம்பளத்தினை வழங்க உடன்பட்டதால் குறித்த தொழிற்சங்கபோராட்டம் கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் சம்பள திருத்தமானது மூன்று வருடங்களுக்கு ஒருமுறை மேற்கொள்ளப்படும் நிலையில் குறித்த சம்பள திருத்தம் ஜனவரி மாதம் கொலன்னாவ அண்மித்தஊழியர்களுக்கு மற்றும் களஞ்சியசாலையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மேற்கொள்ளப்படவில்லை எனவும் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Related posts: