பெற்றோர்களை பிள்ளைகள் இறுதிக்காலத்தில் பராமரிக்க வேண்டும்!
Tuesday, August 28th, 2018
சர்வதேச முதியோர் தினத்தை முன்னிட்டு பெற்றோர்களை பிள்ளைகள் பராமரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்வொன்றை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக கைதடி அரசமுதியோர் இல்ல அத்தியட்சகர் த.கிருபாகரன் தெரிவித்துள்ளார்.
ஒக்ரோபர் முதல் வாரம் முதல் சர்வதேச முதியோர் தினம் முன்னெடுக்கப்படவுள்ளது. இந்நிலையில் முதியோர்களை அவர்களின் பிள்ளைகள் உறவினர்கள் பராமரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு செயற்பாடு முன்னெடுக்கப்படவுள்ளது.
கிராமிய சமூக அமைப்பினர் மற்றும் பாடசாலை, பல்கலைக்கழக மாணவர் மட்டத்தில் இது தொடர்பான கருத்தரங்குகள், விழிப்புணர்வு செயற்பாடுகள் முதியோர் இல்லத்தால் நடத்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மூத்தோர்களை உறவுகள் கைவிடக்கூடாது அவர்களை முதியோர் இல்லங்களில் சேர்ப்பதை தவிர்க்க வேண்டும் அவர்களுக்கான சேவைகள், உதவிகள் போன்றவற்றை ஏற்படுத்தி வாழ்விடங்களின் பராமரிப்பதே சிறந்தது என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு முன்னெடுக்கப்படவுள்ளது.
Related posts:
|
|