பெற்றோரை மதிக்காத பிள்ளைகளுக்கு சிறை – அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க!

Wednesday, October 4th, 2017

பெற்றோருக்குக் கீழ்ப்படியாத பிள்ளைகள் எதிர்காலத்தில் சிறைத் தண்டனை அனுபவிக்கக் கூடிய சூழ்நிலை உருவாகலாம் என்று சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

சமூக மேம்பாட்டுக்கு பிள்ளைகளது பங்களிப்பு அபரிமிதமானது. சிறந்த பண்பாடு மற்றும் ஒழுக்க விழுமியங்கள் உடையவர்களாக அவர்கள் திகழ வேண்டும். தற்போதைய காலத்தில் எத்தனை பேர் அவ்வாறு காணப்படுகின்றனர் என்பது முக்கியமான கேள்வி. பெற்றோருக்குக் கீழ்ப்படியாத பிள்ளைகள் எதிர்காலத்தில் சிறைத்தண்டனை அனுபவிக்கக்கூடிய சூழ்நிலை உருவாகலாம்.

எமது நாட்டில் முதியோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதுடன் அவர்களில் பெருவாரியானோர் முதியோர் இல்லங்களில் வசித்து வருகின்றனர். முதியோரின் நலன் கருதி சகல வசதிகளும் உள்ளடக்கிய விதமாக முதியோர் இல்லங்கள் மூன்றை அமைப்பதற்கு ஆரம்பகட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றேன். தமது பிள்ளைகளால் பராமரிக்கப்படாத பெற்றோரின் வேண்டுகோளுக்கமைவாகவே புதிய முதியோர் இல்லங்கள் ஆரம்பிக்கப்படுகின்றன – என்றார்.

Related posts:


மக்களின் வலிகளை தெரியாதவர்கள் தமிழர் அரசியல் தலைமையாக உருவாக்கப்படுவதே அடாவடித்தன அரசியல் வளரக் காரண...
தொடரும் சீரான மழை வீழ்ச்சி - நீர்மின் உற்பத்தி 4 வீதத்தால் உயர்வு - இலங்கை மின்சார சபை தெரிவிப்பு!
“எங்கள் மக்களுக்குத் தேவையான உணவை நாங்கள் வழங்க வேண்டும் - அதிகாரிகளுக்கு பிரதமர் ரணில் அதிரடி பணிப...