பெறுமதி மிக்க வெளிநாட்டு நாணயத் தாள்களுடன் இருவர் கைது!

சட்டவிரோதமாக ஒரு கோடியே 77,13,793 ரூபா பணத்தை சீனாவுக்கு எடுத்துச்செல்ல முற்பட்ட இலங்கை பிரஜைகள் இருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுங்கப்பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேகநபர்களிடமிருந்து அமெரிக்க டொலர், ஹொங்கொங் டொலர், இந்திய ரூபா மற்றும் இலங்கை நாணயத்தாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் சுங்கப்பிரிவினர் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பிரதி சுங்க பணிப்பாளர் விபுல மினுவன்பிடிய தெரிவித்துள்ளார்.
Related posts:
மாற்றுவழி இருந்தால் அவதானம் செலுத்த வேண்டும்
திடீர் சுகயீனம்: தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரி வைத்தியசாலையில் அனுமதி!!
தொழில் வாய்ப்பின்றி இருக்கும் இளைஞர், யுவுதிகள் உடன் பதிவு செய்யுங்கள் - மனிதவலு மற்றும் வேலைவாய்ப்...
|
|