பெரும் போக உர கொள்வனவிற்காக 12 மில்லியன் ரூபா ஒதுக்கீடு – விவசாயிகளின் வங்கி கணக்குகளில் 15 ஆயிரம் ரூபா வீதம் வரவு வைப்பதற்கும் விவசாய அமைச்சு ஏற்பாடு!

இந்த முறை பெரும் போகத்தின் போது உர கொள்வனவிற்காக 12 மில்லியன் ரூபாவை விவசாயிகளின் வங்கி கணக்குகளில் வரவு வைப்பதற்கு விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது.
இந்த நிலையில், ஒரு ஹெக்டயரில் விவசாயம் மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு 15 ஆயிரம் ரூபா வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அரச அங்கீகாரம் பெற்ற உர நிறுவனங்களால் 9 ஆயிரம் ரூபாவிற்கு வழங்கப்படும் யூரியா உரத்தில் எந்தவித விலை மாற்றமும் ஏற்படுத்தாமல் இருக்க தனியார் நிறுவனங்களும் இணங்கியுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
இரு தினங்களில் வாக்களிக்கத் தவறியவர்கள் : பெப்ரவரி முதலாம் திகதி வாக்களிக்க முடியும் -கிளிநொச்சி மாவ...
வாக்காளர் மாதிரிப் படிவங்களை விரைவில் நிரப்புக – கபே அமைப்பு!
ஜனாதிபதி தேர்தலுக்கான செலவு மேலும் அதிகரிக்கும் - தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர்!
|
|