பெரும் போகத்திற்கு தேவையான சேதனப் பசளை விநியோகத்திற்கு விசேட திட்டம் – விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவிப்பு!

எதிர்வரும் பெரும்போகத்திற்கு தேவையான சேதனப்பசளையை போதிய அளவில் விநியோகத்திற்கென விசேட வேலைத்திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
அத்துடன் நூற்றுக்கு நூறு வீதம் சிறந்த தேசிய உணவு உற்பத்திகளை பெருக்குவதே இதன் முக்கிய நோக்கமாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேநேரம் நச்சுத் தன்மையற்ற உணவு உற்பத்தியை ஊக்குவிக்கும் வேலைத்திட்டத்தின் ஓர் அங்கமாக இது அமைந்துள்ளது என்றும் விவசாயத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதன் அடிப்படையில் சேதனப் பசளை உற்பத்தியை உள்நாட்டில் பெருக்குவதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
யாழ். நூலகம் எரிக்கப்பட்டு இன்றுடன் 35 வருடங்கள் நிறைவு!
கொறோனா வைரஸ் கொறோனா வைரஸ்: இலங்கையை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுப்பு - சுகாதார அமைச்சர் ...
எரிபொருள் இறக்குமதிக்கு தேவையான டொலர்களை மத்திய வங்கி ஏற்றுக்கொள்ளும் - மத்திய வங்கியின் ஆளுநர் ஜனா...
|
|