பெரும்போக செய்கையில் பாதிப்பு – விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க விவசாய பாதுகாப்புச்சபை நடவடிக்கை!

Tuesday, December 20th, 2022

2021-2022 பெரும்போக பயிர்செய்கைக்கு ஏற்பட்ட பாதிப்புக்களுக்காக விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க விவசாய மற்றும் விவசாய பாதுகாப்புச்சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி, அரசாங்கத்தினால் 657 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த வேலைத்திட்டத்தின் கீழ் 31, 613 விவசாயிகளால் பயிரிப்பட்டு பாதிப்புக்குள்ளான 42,934 ஏக்கர் நிலத்துக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, கடந்த பெரும்போகத்தில் அதிக பாதிப்புக்குள்ளான அநுராதபுர மாவட்டத்திற்கு 81 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: