பெரும்போக அறுவடை நெல்லை கொள்வனவு செய்யும் வேலைத்திட்டம் ஆரம்பம்!

பெரும்போக அறுவடை நெல்லைக் கொள்வனவு செய்வதற்கான அரசாங்கத்தின் வேலைத்திட்டம் ஆரம்பமாகவுள்தாக நெல் சந்தபப்படுத்தல் சபை தெரிவித்துள்ளது..
நெல் சந்தைப்படுத்தல் சபை மூலம் 3 இலட்சம் மெற்றிக் தொன் நெல் கொள்வனவு செய்யப்படும் என்றும் இந்தப் பணிகள் கமநல உதவி ஆணையாளர்கள், நெல் சந்தைப்படுத்தல் சபையின் பிரதேச முகாமையாளர்கள் ஆகியோர்களது நேரடிக் கண்காணிப்பில் நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தடன் கூடுதல் நெல்லைக் கொள்வனவு செய்து களஞ்சியப்படுத்தி வைப்பது அரசாங்கத்தின் நோக்கமாகும். இந்நிலையில் நெல் கொள்வனவு வேலைத்திட்டம் இன்று அம்பாறை மாவட்டத்தில் ஆரம்பமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் விடுத்துள்ள எச்சரிக்கை!
மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெறமுடியும் - பொதுஜன பெரமுன நம்பிக்கை!
இன்று முன்னிரவு 8 மணிமுதல் 57 மணி நேரம் முழுமையாக முடக்கப்படுகின்றது இலங்கை - ஜனாதிபதி செயலகம் அறிவி...
|
|