பெரும்போகத்தில் 8 இலட்சத்து 45 ஆயிரம் ஹெக்டேயரில் நெற்செய்கை மேற்கொள்ள திட்டம் – விவசாய சேவைகள் திணைக்களம் தெரிவிப்பு!

Tuesday, September 27th, 2022

இம்முறை பெரும்போகத்தில் 8 இலட்சத்து 45 ஆயிரம் ஹெக்டேயர் அளவில் நெற்செய்கை மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக விவசாய சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேநேரம் சிறு போகத்தில் 5 இலட்சத்து 12 ஆயிரம் ஹெக்டேயர் அளவில் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

சிறு போகத்தில் சுமார் 80 வீதமான அறுவடை கிடைத்ததாகவும் விவசாய சேவைகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: