பெரும்போகத்தின் போது 1.5 கோடி கிலோ நெல் கொள்வனவு – நெல் சந்தைப்படுத்தல் சபை தெரிவிப்பு!

பெரும்போகத்தின் போது ஒரு கோடியே 50 இலட்சம் கிலோ நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபை தெரிவித்துள்ளது.
அத்துடன் பண்டிகை காலத்தில் அரிசிக்கான தட்டுப்பாடு ஏற்படுமாயின் அந்த நெல்லை அரிசியாக்கி சந்தைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அந்த சபையின் உப தலைவர் டபிள்யூ. எச். துமிந்த பிரியதர்ஷன குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்பவர்களை கைது செய்வதற்கான சுற்றி வளைப்புக்கள் தொடர்கின்றதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.
அத்துடன் இது தொடர்பில் இதுவரை சுமார் 1500 சுற்றி வளைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரசபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..
Related posts:
எதிர்பார்த்த விளைச்சல் கிடைக்காததால் விரைவில் அரிசி தட்டுப்பாடு ஏற்படலாம் - விவசாயத் துறை எச்சரிக்கை...
இன்றும் இரண்டு அமைச்சரவை அமைச்சர்கள் கோத்தபாய ராஜபக்ஷ முன்னிலையில் சதியப்பிரமாணம்!
கடமைகளை உரிய முறையில் மேற்கொள்ளுமாறு அனைத்து அமைச்சு செயலாளர்களுக்கும் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச வ...
|
|