பெரும்பாலும் மழையற்ற காலநிலை நிலவக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறுல்!

நாட்டின் பல பகுதிகளில் இன்று பெரும்பாலும் மழையற்ற காலநிலை நிலவக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
அத்துடன், காலி தொடக்கம் மாத்தறை வரையான கடற்பரப்புகளில் சிறிதளவு மழை பெய்யக் கூடும் என அந்த திணைக்களம் அறிவித்துள்ளது.
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்று வடமேற்கு அல்லது தென்மேற்கு திசையிலிருந்து வீசுவதுடன் காற்றின் வேகமானது மணிக்கு 20-40 கிலோமீற்றர் வேகத்தில் வீசக்கூடும்.
இதனால், மாத்தறை முதல் ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புக்கள் சற்று கொந்தளிப்புடன் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
நெல் கொள்வனவை நிறுத்தியது கொடிகாமம் கூட்டுறவுச் சங்கம்!
மின்சார சபை ஊழியர்கள் சுகயீன விடுமுறை!
இந்திய தலைநகர் புதுடில்லியில் ஆரம்பமானது பாதுகாப்பு, நிதி மற்றும் பொருளாதாரம் குறித்த சர்வதேச மாநாடு...
|
|