பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்யும் – வளிமண்டலவியல் திணைக்களம்!

Saturday, July 13th, 2019

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு சாதகமான வளிமண்டல நிலைமை தற்போது காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்தது.

சப்ரகமுவ, மத்திய, மேல் மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

ஏனைய பகுதிகளில் பல இடங்களில் பிற்பகல் 2.00மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50-75மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும், வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்தது.

எனவே, மின்னல் தாக்கத்திலிருந்து முன்னெச்சரிக்கையாக இருக்குமாறும் பொதுமக்களை வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

Related posts: