பெரியளவில் குற்றச் செயல்கள் இல்லை – பொலிஸ் மா அதிபர்!

Saturday, March 18th, 2017
ஆங்காங்கே நடக்கும் சில குற்றச் செயல்களை தவிர நாட்டுக்குள் பெரியளவில் குற்றச் செயல்கள் நடப்பதில்லை என பொலிஸ் மா அதிபர் பூஜீத் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

கண்டி அஸ்கிரிய பிரதேசத்தில் பொலிஸ் அதிகாரிகளுக்காக நிர்மாணிக்கப்பட்டுள்ள விடுதியை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

குற்றச் செயல்களை தடுக்க கடந்த காலத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் காரணமாக சிறந்த பலன்கள் கிடைத்துள்ளன.இதற்கு ஊடகங்களுக்கு பிரசாரத்தை பெற்றுக்கொடுக்க வேண்டியதும் முக்கியமானது எனவும் பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: