பெப்ரவரி 10இற்கு பின் நிதியமைச்சில் மாற்றம்?

Friday, January 26th, 2018

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்குப் பின்னர் அமைச்சரவையில் மாற்றத்தை ஏற்படுத்தவுள்ளதாக ராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

இந்நடவடிக்கையை நாட்டின் பொருளாதாரத்தை முன்னோக்கிக் கொண்டுசெல்லும் நோக்கிலும் அரசியல் மற்றும் சமூக பிரச்சினைகளை கவனத்திற்கொண்டும் ஜனாதிபதிமேற்கொள்ளவுள்ளதாக ராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும் அண்மையில் நாட்டின் நிதி முகாமைத்துவத்தை தான் பொறுப்பேற்கவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்திருந்தார். இந்நிலையில் நிதியமைச்சு மற்றும் திட்டமிடல்அமைச்சில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படுமா என ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்ப அதற்கான வாய்ப்புகளும் உள்ளதாக லக்ஷ்மன் யாப்பா தெரிவித்துள்ளார்.

Related posts: