பெப்ரவரி முதல் தகவல் அறியும் உரிமை சட்டம் அமுல் – அரசாங்கம்!

பெப்ரவரி 3 ஆம் திகதி முதல் தகவல் அறியும் சட்டம் அமுலுக்கு வரும் என்று அமைச்சரவைப் பேச்சாளரும் பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் வெகுஜன ஊடக அமைச்சருமான கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்.
மேலும், அன்றைய தினத்திலிருந்து மக்கள் தமக்குத் தேவையான தகவல்களை பெற்றுக் கொள்ள முடியும் எனவும் அவர் கூறினார். அரச தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவையின் வாராந்த முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டிருந்தபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
நல்லாட்சி அரசின் வாக்குறுதிக்கமைவாக தகவல் அறியும் சட்டம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் பெப்ரவரி 3 ஆம் திகதி வெளியிடப்படவுள்ளது என அவர் கூறியுள்ளார். இதற்கிணங்க அன்றைதினம் முதலேயே அரச நிறுவனங்கள் தொடர்பில் மக்கள் தமக்கு தேவையான அனைத்து தகவல்களையும் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
தற்போது அனைத்து அரச நிறுவனங்களினதும் பிரதான நிறுவனங்களின் தகவல் தொடர்பான அதிகாரிகளை நியமிப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
இது தொடர்பில் அரச அதிகாரிகளை தெளிவுபடுத்தும் வேலைத்திட்டம் ஒன்றையும் நடைமுறைப்படுத்தவுள்ளதாக அமைச்சர் கயந்த கருணாதிலக மேலும் சுட்டிக்காட்டினார்.
Related posts:
|
|