பெப்ரவரி மாதம் 6 தொடக்கம் 12 வரையான காலம் தேசிய உடற்பயிற்சி வாரம்!

ஆரோக்கியம், மகிழ்ச்சி, வினைத்திறன் மற்றும் வெற்றிகரமான இலங்கையர்களை உருவாக்குவதற்காக 2017 பெப்ரவரி 06 ஆம் திகதியிலிருந்து 12 ஆம் திகதிவரையான ஒரு வார காலம் விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி தேசிய வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி மேம்படுத்தல் நிகழ்வுகள் நாடு பூராவும் அமுல்படுத்தப்படவுள்ளன.
இவ் விடயம் தொடர்பான கலந்துரையாடல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் நேற்று முன்தினம் (10) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற போது, அனைத்து நிறுவனங்களினதும் பங்களிப்பைப் பெற்று செயற்திட்டத்தை அமுல்படுத்துமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.
மக்களது உடல் நலம் மற்றும் உளநலத்தை மேம்படுத்துவதற்காக இது போன்ற நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்ய வேண்டியதன் முக்கியத்துவத்தை ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.சுகம், மகிழ்ச்சி மற்றும் வெற்றிக்காக விளையாட்டு எனும் தலைப்பில் நடைபெறும் விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி மேம்படுத்தல் வாரத்தில் பின்வருமாறு நிகழ்வுகள் அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளன.
- பெப்ரவரி 06 அரச மற்றும் கூட்டுத்தாபன அலுவலர்களுக்கான விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி தினம்.
- பெப்ரவரி 07 தனியார் துறையினருக்கான விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி மேம்படுத்தல் தினம்.
- பெப்ரவரி 08 சிறுவர் மற்றும் தாய்மார்களுக்கான விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி மேம்படுத்தல் தினம்.
- பெப்ரவரி 09 பெண்களுக்கான விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி மேம்படுத்தல் தினம்.
- பெப்ரவரி 10 முதியோர் மற்றும் விசேட தேவையுடையோர்களுக்கான விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி மேம்படுத்தல் தினம்.
- பெப்ரவரி 11 இளைஞர்களுக்கான விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி மேம்படுத்தல் தினம்.
- பெப்ரவரி 12 சமூக பங்களிப்புக்கான விளையாட்டு மற்றும் உடற்பயிற்றி மேம்படுத்தல் தினம்
விளையாட்டு துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர, அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, டபிள்யூ.டீ.ஜே.செனவிரத்ன, மகிந்த சமரசிங்க, சந்ராணி பண்டார ஆகியோர் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும், அமைச்சுக்களின் செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள் மற்றும் அரச அலுவலர்களும் இக் கலந்துரையாடலில் பங்குபற்றினார்கள்.
Related posts:
|
|