பெப்ரல் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றது!

ஒத்திவைக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்தும் தினத்தை அறிவிக்குமாறு, அரசாங்கத்திற்கு உத்தரவிடக் கோரி, பெப்ரல் அமைப்பினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை விசாரணை செய்ய, உயர்நீதிமன்றம் அனுமதியளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது..
இன்று குறித்த மனு பரிசீலணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்போது, எல்லை நிர்ணய நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ள, உள்ளூராட்சி மன்றங்களுக்கு தேர்தலை நடத்தும் வாய்ப்பு உள்ளதாக, மனுதாரர் தரப்பில் ஆஜரான சட்டத்தரணி குறிப்பிட்டார்.
எனவே உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்தும் தினத்தை அறிவிக்குமாறு, அரசாங்கத்திற்கு உத்தரவிடும் படியும் அவர் நீதிமன்றத்திடம் கோரினார். இதன்படி விடயங்களை ஆராய்ந்த மூவர் அடங்கிய நீதியரசர்கள் குழாம், குறித்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள அனுமதியளித்ததோடு, சம்பந்தப்பட்ட அமைச்சர் மற்றும் தேர்தல்கள் ஆணையகத்தின் உறுப்பினர்களுக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவு பிறப்பித்துள்ளனர்
Related posts:
|
|