பெப்ரல் அமைப்பிற்கு அமைச்சர் பைசர் முஸ்தபா விளக்கம்!

Sunday, January 15th, 2017

எதிர்வரும் 17 ஆம் திகதி அனைத்து உறுப்பினர்களினதும் கையொப்பத்துடனான அறிக்கையொன்றை கையளிப்பதற்கு அசோக்க பீரிஸ் தமக்கு உறுதியளித்துள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் விவகார அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

அதனால் குறித்த அறிக்கை தமக்கு கிடைக்கும் என அவர் நம்பிக்கை வெளியிட்டதோடு, அந்த அறிக்கை கிடைத்தவுடன் அதனை வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

எல்லை நிர்ணய அறிக்கை தொடர்பாக அனைத்து பிரச்சினைகளும் எதிர்வரும் 17 ஆம் திகதியுடன் நிறைவடைய வேண்டும் எனவும், அவ்வாறு நிறைவேறாவிட்டால் துறைசார்ந்த அமைச்சருக்கும், குழு உறுப்பினர்களுக்கும் என நீதிமன்ற நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக பெப்ரல் அமைப்பு தெரிவித்திருந்தது. அந்த கருத்துக்கு பதிலளிக்கும் முகமாவே அமைச்சர் பைசர் முஸ்தபா இந்த பதிலை அளித்துள்ளார்.

faizer-musthafa

Related posts: