பெண் பொலிஸார் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண நடவடிக்கை!

Friday, August 26th, 2016

நாட்டில் பொலிஸ் சேவையிலுள்ள பெண் பொலிஸ் அதிகாரிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அவர்கள் எதிர்நோக்கும் துன்புறுத்தல்களுக்கு தீர்வு பெற்றுக் கொடுப்பதற்கு 9 மாகாணங்களுக்கும் 9 பேரை நியமி்ப்பதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது..

மகளிர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்கள் மற்றும் பொலிஸ் அத்தியட்சகர்கள் இந்தப் பணிக்கு நியமிக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் ஆரியதாஸ குரே தெரிவித்தார். இதேவேளை தமது பிரச்சினைகளை இதன் பின்னர் ஆண் உத்தி​யோகஸ்த்தர்களிடம் அன்றி தமது மாகாணத்திற்கு பொறுப்பாக நியமிக்கப்படவுள்ள பெண் அதிகாரிகளிடம் முறைப்பாடுகளை சமர்ப்பிக்க முடியும் என பொலிஸ் தலைமையகம் சுட்டிக்காட்டியுள்ளது

Related posts: