பெண் சாரணிய இயக்கத்தை பாடசாலைகளில் முன்னெடுப்பதற்கு நடவடிக்கை –  பிரதமர்!

Monday, February 13th, 2017

நாம் இலங்கையர்கள் என்ற ரீதியில் பல்வேறுபட்ட கலாச்சாரத்திற்கு மத்தியில் வாழ்ந்தபோதிலும் அரசியல் மற்றும் மத ரீதியில் பிளவுபட்டிருக்க வேண்டியதில்லை என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளர்.

கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று காலை நடைபெற்ற இலங்கை சாரணர் சம்மேளனத்தின் 100வது  ஆண்டு நிறைவு வைபவத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கலந்து கொண்டு உரையாற்றினார்.

பெண் சாரணிய இயக்கத்தை பாடசாலைகளில் முன்னெடுப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். எதிர்வரும் 5 வருட காலத்தில் இதனை நடைமுறைப்படுத்துவதற்கான திட்டத்தை தம்மிடம் சமர்ப்பிக்குமாறும் பிரதமர் இதன் போது கோரிக்கை விடுத்தார்.

பயங்கரவாத மோதல் நிலவிய காலப்பகுதியில் சாரணர்கள் மிகவும் சிரமமான முறையில் பொது மக்களின் நலனுக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டதையும் பிரதமர் அங்கு சுட்டிக்காட்டினார்.

இலங்கையின் எதிர்காலத்தை பாதுகாப்பதற்கு இவர்கள் செயற்படுவதையிட்டு நன்றி தெரிவிப்பதாகவும் தெரிவித்த பிதமர் பெண்களுக்கு சமூகத்தில் தனித்து வாழ்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு சாரணர் இயக்கம் பெரும் உதவியாக அமையும். இதில் பெண் சாரணியர்களின் ஒற்றுமை மிகவும் முக்கியமானதாகும். இது நாடு முன்னோக்கி செல்வதற்கு பெரும் உதவியாக அமையும். நாம் இலங்கையர்கள் என்ற ரீதியில் பல்வேறுபட்ட கலாச்சாரத்திற்கு மத்தியில் வாழ்ந்தபோதிலும் அரசியல் மற்றும் மத ரீதியில் பிளவுபட்டிருக்க வேண்டியதில்லை.

நாடு சுதந்திரம் பெற்ற போது இனவாதம் இருக்கவில்லை ஒவ்வொருவரும் அன்புடன் செயற்பட்டு வாழ்வதன் அவசியம.; இதுவே முன்னோக்கிச் செல்வதற்கு முக்கியமானது  என்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்தார்.

B37A0617

Related posts: