பெண்ணின் வயிற்றில் துழையிட்டு சத்திரசிகிச்சையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையும் வெற்றிகண்டது!

Sunday, January 2nd, 2022

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் லப்பிரச்கொப்பி (Laproscopy) அறுவைச்சிகிச்சை முறையில் பெண் ஒருவரிற்கு கருப்பை அகற்றப்பட்டுள்ளதாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் பதில் பெண்நோயில் நிபுணர் வைத்திய சிவராஜா சிஜேதரா தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.

மேலும் வைத்தியத்துறை வளர்ச்சியடைந்துள்ள நிலைமையில் பல சத்திரசிகிச்சைகள் உடலில் பெரிய வெட்டுக்காயங்களை ஏற்படுத்தாமல் வயிற்றில் 1cm, 0.5cm அளவான 2-4 துளைகளிட்டே மேற்கொள்ளப்படுகின்றன, இவ்வாறான சத்திரசிகிச்சைகளின் போது பெரிய வெட்டுக்காயம் ஏற்படுவதில் மாத்திமின்றி வலியும் குறைவு அத்துடன் நோயாளி இலகுவில் வழமை நிலைக்குத்திரும்பிவிடுவார்.

இம்முறையில் பெண்களின் கருப்பை அகற்றும் சிகிச்சை பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வந்தாலும் எமது பிரதேசங்களில் அதற்குரிய உபகரணங்கள் மற்றும் நேரம் பற்றாக்குறையினால் அரிதாகவே மேற்கொள்ளப்பட்டுகின்றன.

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் பதில் பெண்நோயில் நிபுணராக கடைமையேற்ற பின்பு நிறைவேற்றப்பட்ட முதலாவது சத்திரசிகிச்சையாகும்.

இந்த வைத்தியசாலை லப்பிரச்கொப்பி (Laproscopy) இயந்திரம் சகல வசதிகளும் இல்லாத போதிலும் எம்மால் இந்த சத்திரசிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

44 வயதுடைய குறித்த நபருக்கு நீண்டகாலமாக மாதவிடாயின் போது அதிகமாக குருதிப்போக்கு காணப்பட்ட நிலையில் வேற சிகிச்சைகள் பலனளிக்காத நிலையிலேயே கருப்பை அகற்றப்பட்டது எனவும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: