பெண்கள் வலுவூட்டல் கருத்தரங்கு யாழ்ப்பாணத்தில்!

Sunday, May 28th, 2017

இலங்கை பாராளுமன்ற பெண் உறுப்பினர்கள் சபை மற்றும் ஜனநாயக ஆளுகையையும் பொறுப்புக் கூறலையும் பலப்படுத்தும் கருத்திட்டம் (Sdgap) ஏற்பாட்டில் யாழ்.நகரில் அமைந்துள்ள கிறீன் கிறாஸ் விருந்தினர் விடுதியில் இந்த கருத்தரங்கு நடைபெற்றது.

இந்த செயலமர்வில், பெண்கள், சிறுவர் விவகாரம் மற்றும் இலங்கை பாராளுமன்ற பெண்கள் சபை தவிசாளருமான சந்திராணி பண்டார  உள்ளிட்ட சில் பிரமுகர்கள் கலந்தகொண்டு சிறப்பித்திருந்தனர்.

கருத்தரங்கின் ஆரம்பத்தில் தென்மாகாணத்தில் இடம்பெற்ற இயற்கை அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரண்டு நிமிட அஞ்சலி செலுத்தப்பட்டது.

அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவம் மற்றும் தற்போது ஒதுக்கப்பட்டுள்ள 25 வீத பிரதிநிதித்துவம் குறித்தும் பெண்களுக்கு விளக்கங்கள் அளிக்கப்பட்டன.இந்த நிகழ்வில், வடமாகாணத்தினைப் பிரதி பலிக்கும் பெண்கள் அமைப்புக்கள் மற்றும் பலர் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: