பெண்கள் மீதான வன்முறைகள் கட்டுக்குள் வரும் யாழ்ப்பாண மூத்த பொலிஸ் அத்தியகட்சர் ஸ்ரனிஸ்லஸ் தெரிவிப்பு!

Wednesday, January 11th, 2017

யாழ்.நகரப் பகுதி மற்றும் கோட்டையை அண்மித்த பகுதிகளில் பெண்கள் மீது மேற்கொள்ளப்படும் துர்நடத்தைச் சம்பவங்கள், சேட்டைகளைக் கட்டுப்படுத்துவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ். மூத்த பொலிஸ் அத்தயகட்சர் ஸ்ரனிஸ்லஸ் தெரிவித்துள்ளார். யாழ்.மாவட்ட செயலகத்தில் பொதுமக்கள் பாதுகாப்புக் குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது.

யாழ்.நகாரில் அமைந்துள்ள கோட்டைப் பகுதியில் மறைவான இடங்கள் காணப்படுகின்றன. அவை சமூக சீரழிவுகளுக்கு வகை செய்கின்றன. இளம் பெண்கள் இந்தப் பகுதிக்கு அழைத்து வரப்படுகின்றனர். அவர்கள் துர்நடத்தைக்கு உட்படுத்தப்படுகின்றனர். இது தொடர்பில் யாழ்.மாவட்டச் செயலகத்திற்கு பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. யாழ்.மையப் பேருந்து நிலையப் பகுதி, யாழ்.நகரில் உள்ள தனியார் கல்வி நிறுவனங்கள் முன்பாக கூடும் இளைஞர்கள் பெண்கள் மீது பாலியல் சேட்டைகளைப் புரிகின்றனர். இந்த விடயங்கள் தொடர்பில் பொலிஸார்  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற யாழ்.மாவட்டச் செயலகத்தினரால் கோரிக்கை முன்வக்கப்பட்டுள்ளது.

சமூக விரோதச் செயல்களைக் கட்டுப்படுத்தப் பொலிஸாரினால் உரிய நடவடிக்கை துரிதமாக எடுக்கப்படும். இவ்வாறான செயல்களில் ஈடுபடுவர்கள் மற்றும் குழக்கள் அவர்களின் பின்னணி என்ன என்பது தொடர்பாக ஆராயப்பட்டுச் சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கை துரிதப்படுத்தப்படும். குற்றச்செய்கள் டைபெறும் இடங்களை  பொலிஸார் சிவில் உடையில் கண்கானிப்பார் என்று மூத்த பொலிஸட அத்தியகட்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

police-kaniston

Related posts:


பதிவு செய்யப்படாத மோட்டார் சைக்கிள்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கை நீக்கம் - இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன...
அபராத தொகையை செலுத்த முடியாது சிறையிலுள்ள கைதிகளை ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்க நடவடி...
இரசாயனப் பொருட்களைப் பயன்படுத்தி பழுக்கவைக்கப்படும் பழங்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அறிக்கை ...