பெண்கள் பன்னாட்டு மாநாடு ஜீலை 21 யாழ்ப்பாணத்தில்!

முதற் தடவையாகப் பன்னாட்டு பெண்கள் மாநாடு ஏற்பாடு யாழ்ப்பாணத்தில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இந்த மாநாடு எதிர்வரும் ஜீலை மாதம் 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் நடைபெறவுள்ளது.
ஆய்வுகள் வெறுமனே கல்வியியலாளர்களின் பதவி உயர்வுக்கானவையாக அமையாது அவை பிரயோக ஆய்வுகளாக அமைய வேண்டும் என்ற நோக்கம் கருதி தன்னார்வத் தொண்டுப் பணியாளர்களும் அமைப்புக்களும் ஒன்றிணைந்து இந்த மாநாட்டை ஒழுங்குபடுத்தியுள்ளன. யாழ்ப்பாண மாவட்ட அரசசார்பற்ற நிறுவனங்களின் இணையம் இந்த மாநாட்டை ஒழுங்கு செய்து நடத்துகின்றது.
இலங்கையில் போர் முடிந்த பின்னர் வடக்குக் கிழக்கில் நடைபெறுகின்ற அபிவிருத்தி மற்றும் மீள் நல்லிணக்கச் செயற்பாடுகளில் பெண்களின் நிலையை வலுப்படுத்துவதற்கான செயற்றிட்டத்தை முன்னெடுப்பதற்கு வசதியாக இந்த ஆய்வு மாநாடு திட்டமிடப்பட்டுள்ளது.
ஆய்வரங்கு மற்றும் கலைவெளிப் பாட்டரங்கு என்று இரண்டு பிரிவாக மகாநாடு நடைபெறவுள்ளது. மகாநாட்டுக்காக இணையத்தளம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஏனைய நாடுகளின் பட்டறிவு மற்றும் மீண்டெழுந்த செயற்பாடுகள் தொடர்பாக விடயங்களை இந்த ஆய்வரங்கில் பகிர்ந்து கொள்ள வேண்டும். நேரடியாகச் சமூகம் தர முடியாவிட்டாலும் தமது அனுபவங்களையும் ஆய்வுகளையும் மகாநாட்டில் சமர்ப்பிக்க முடியும் என்றும் உலகெங்குமுள்ள தமிழர்கள் தங்கள் ஆதரவை வழங்க வேண்டுமென்றும் ஏற்பாட்டாளர்கள் கோரியுள்ளனர்.
Related posts:
|
|