பெண்களை குடும்பத் தலைமையாகக் கொண்ட குடும்பங்களுக்கு ஈ.பி.டி.பியின் திருமலை  மாவட்ட இளைஞர் அணியினரால் இலவச உலருணவு பொருட்கள் வழங்கிவைப்பு!

Saturday, May 19th, 2018

திருகோணமலை வீரமாநகர் பிரதேசத்தில் உள்ள தெரிவுசெய்யப்பட்ட குடும்பத் தலைவரை இழந்த குடும்பங்களுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் இளைஞர் அணியின் முயற்சியால் இலவச உலருணவு பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டன.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் திருமலை மாவட்ட இளைஞர் அணியின் தலைவர் குணா அவர்களிடம் குறித்த பிரதேசத்தின்  60 வயதுக்கு மேற்பட்ட பெண்களைக் குடும்பத் தலைமையாகக் கொண்ட குடும்பங்கள் விடுத்திருந்த கோரிக்கைக்கு அமைவாக கட்சியின் இளைஞர் அணியினர் திருமலை கிறிஸ்தவ வாழ்வு சமூகத்தின் (C.L.C) உதவியுடன் குறித்த வறிய குடும்பங்களது வாழ்வாதார தேவைகளுக்கான உலருணவு பொருட்களை வழங்கி வைத்துள்ளனர்.

இன்றுகாலை நடைபெற்ற குறித்த நிகழ்வு தொடர்பில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் திருமலை மாவட்ட இளைஞர் அணியின் தலைவர் குணா தெரிவிக்கையில் –

திருமலை வீரமா நகரில் அதிகளவான பெண்களை தலைமைத்துவமாக உள்ள குடும்பங்கள் மிக வறுமையில் வாழ்கின்றனர். இதில் 60 வயதை தாண்டிய பெண்களை தலைமைத்துவமாக கொண்ட பல குடும்பங்கள் மிக வறுமையில் உதவிகள் ஏதுமின்றி வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் எமது கட்சியிடம் அந்த குடும்பங்கள் விடுத்திருந்த கோரிக்கைக்கு அமைய நாம் திருமலை கிறிஸ்தவ வாழ்வு சமூகத்தின் நிர்வாகத்தினருடன் இணைந்து இந்த உலருணவு திட்டத்தை உருவாக்கி மாதாந்தம் ஒருதடவை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம் என தெரிவித்தார்.

32862187_1771654639540282_893151982645149696_n 32878092_1771654672873612_4306335468842123264_n 32974726_1771654722873607_3249284282891370496_n 33118914_1771654599540286_2814189879464820736_n

Related posts: