பெண்களின் அனுமதியில்லாமல் அவர்களின் பெயர்களை வேட்பாளர் பட்டியலில் உள்ளடக்கிய கட்சிகள்!

Monday, January 1st, 2018

அரசியல் கட்சிகள் பெண்களின் அனுமதியில்லாமல் அவர்களின் பெயர்களை வேட்பாளர் பட்டியலில் உள்ளடக்கியுள்ளதாக, தமக்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாக தேர்தல் வன்முறைகளைக் கண்காணிக்கும் மைய நிலையம் தெரிவித்துள்ளது.

கண்டி மாவட்டத்தில் கர்ப்பிணிப் பெண் ஒருவரின் பெயரை அவரது சம்மதம் இல்லாமல் கட்சி ஒன்று பயன்படுத்தியுள்ளது. இதேபோன்று கேகாலை மாவட்டத்திலும் இரண்டு பெண்களின் பெயர்களை அவர்களது சம்மதம் இல்லாமல் அரசியல் கட்சிகள் பயன்படுத்தியுள்ளன. இது தொடர்பில் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மேலும் பெண் வேட்பாளர்களுக்கு எதிரான வன்செயல் தொடர்பில் 24 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளது என்று தேர்தல் வன்முறைகளைக் கண்காணிக்கும் மையம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர, பெண் வேட்பாளர்கள் மீதான வன்முறை தொடர்பில் 12 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அவற்றுள் 4 முறைப்பாடுகள், வாக்காளர்களை பெண் வேட்பாளருக்கு வாக்களிக்கக் கூடாது என்று வற்புறுத்தியமை தொடர்பில் அமைந்துள்ளதாகத் தெரிவித்தார்.

Related posts: