பூஸ்டர் தடுப்பூசி தொடர்பில் பிழையான தகவல்கள் பரப்பப்படுகின்றன – இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன கவலை!

பூஸ்டர் தடுப்பூசி டோஸ் தொடர்பில் சமூகத்தில் பல்வேறு தகவல்கள் பரப்பப்பட்டு வருவதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
எனினும் முதல் டோஸ் மற்றும் இரண்டாவது டோஸ் செலுத்துகையை ஏற்றிய போது ஏற்படாத பக்க விளைவுகள் எதுவும் மூன்றாவது செலுத்துகையின்போது ஏற்பட்டதாக இதுவரையில் கண்டறியப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் இந்த விடயம் தொடர்பில் சுகாதார அமைச்சு தொடர்ந்தும் ஆராய்ந்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
எனினும், மூன்றாவது டோஸ் தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டியது அவசியமானது என அவர் பொதுமக்களிடம் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை சமூக ஊடகங்களில் பூஸ்டர் டோஸ் பற்றி பிழையான தகவல்கள் வெளியிடப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
கொரோனா அலையை கட்டுப்படுத்துவதற்கான சிறந்த வழி பூஸ்டர் டோஸ் போட்டுக் கொள்வதேயாகும் எனவும் பேராசிரியர் சன்ன ஜயசுமன ஊடகங்களிடம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|