பூமியை நெருங்கிய சூரியன்…!

Tuesday, March 3rd, 2020

நாடளாவிய ரீதியாக நிலவும் வெப்பத்துடனான காலநிலை எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல்வாரத்தில் மேலும் அதிகரிக்கக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. பூமி சூரியனுக்கு மிக நெருக்கமாகியுள்ளமையே இதற்கான காரணம் என கண்டறியப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக 57 ஆயிரத்து 492 குடும்பங்களை சேர்ந்த இரண்டு லட்சத்து 39 ஆயிரத்து 364 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இதனை தெரிவித்துள்ளது.

சுத்தமான குடிநீரில் கடல் நீர் கலந்ததன் காரணமாக 50 ஆயிரத்து 452 குடும்பங்களை சேர்ந்த இரண்டு லட்சத்து 12 ஆயிரத்து 728 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Related posts: