பூநகரி முழங்காவில் பகுதி காணி பதிவுகளை சீராக முன்னெடுக்கவென காணி கச்சேரியொன்றை நடாத்த திட்டம்

92571407 Friday, May 13th, 2016

முறையற்ற காணிப்பங்கீடுகளால் பாதிக்கப்பட்டுள்ள காணி உரிமையாளர்களுக்கு தேவையான நிவாரணங்களை பெற்றுக்கொடுக்கவென பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா காணி அமைச்சு அதிகாரிகாரிகளின் ஆலோசனை வழிகாட்டலுடன் முழங்காவில் கிராமசேவகர் பிரிவில் காணிகச்சேரியொன்றை நடாத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.

காலஞ்சென்ற பிரதம மந்திரிசிறீமாவோ பண்டாரநாயக்காவின் ஆட்சிக்hலத்தில் வன்னிபிரதேச விவசாய முயற்;சிகளை விரிவுபடுத்தவென 60 களின் பிற்பகுதியில் ஏற்படுத்தப்பட்ட விவசாய குடியேற்றங்களில் முழங்காவில் விவசாய குடியேற்றத்திட்டம் பிரதானமானது.

இக்குடியேற்றம் ஆரம்பிக்கப்பட்டு சுமார் 45வருடங்கள் கடந்துவிட்ட நிலையில் போர்ச்ழலுடன் தொடர்புபட்டு பல்வேறு காரணங்களுக்காக இக்காணி உரிமங்கள் கைமாற்றப்பட்டிருந்தன.

இப்போது போர் முடிவுக்குகொண்டுவரப்பட்டு 6ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் சில காணி உத்தியோகத்தர்களின் உத்தியோகப்பற்றற அறிவிப்புக்களால் தமது காணி உரிமங்களை தாம் இழக்கவேண்டி நேரிடலாம் என்கிற சந்கேங்கள் விவசாயிகள் மத்தியில் தோன்றியுள்ளன.

இந்த நிலையில் ஒரு நியாயமான சரியான காணிப்பங்கீட்டை முன்னெடுக்கவும் காணிப்பங்கீடு குறித்த புதிய அறிவிப்புக்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தேவையான நிவாரணங்களை பெற்றுக்கொடுக்கவுமென இதில் தொடர்புபடும் நிறைவேற்றுத்தரத்திலான உயர் அதிகரிகளின் ஆலோசனையுடன் காணிக் கச்சேரியொன்றை நடாத்த டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.

இந்த காணிக்கச்சேரி நடைபெறுவதையிட்டு குறித்த பிரதேச மக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


பணித்தடை செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு நீதி கோரி இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது
அச்சுவேலி முக்கொலை வழக்கு  மேல் நீதிமன்றுக்கு மாற்றம்!
நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை – சிலோன் பெற்றோலிய கூட்டுத்தாபனம்!
மீற்றர் வட்டி சட்டவிரோதமானது - யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன்!
விசேட சுற்றிவளைப்புக்களை மேற்கொள்ள நுகர்வோர் விவகார அதிகார சபை நடவடிக்கை!