பூநகரி பிரதேசமாதர் அமைப்புகளுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியால் தளபாடங்கள் வழங்கிவைப்பு!

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் கெளரவ அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்களின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பூநகரி பிரதேசத்திலுள்ள இரண்டு மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்களுக்கு இன்று (15.11.2018) ஒரு தொகுதி தளபாடங்கள் வழங்கிவைக்கப்பட்டன.
பூநகரி பிரதேசத்திலுள்ள ஞானிமடம், நெற்புலவு ஆகிய கிராமங்களின் மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்களுக்கே இவ்வாறு தளபாடங்கள் வழங்கிவைக்கப்பட்டன.
குறித்த கிராமங்களுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் கெளரவ டக்ளஸ் தேவானந்தா அவர்கள் விஜயம் செய்திருந்த போது பொதுமக்களால் விடுக்கப்பட்ட கோரிக்கையினை அடுத்தே அவரின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் வழங்கப்பட்ட தளபாடங்களை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட நிர்வாகச் செயலாளரும் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினருமான வை.தவநாதன் அவர்கள் மாதர் கிராம அபிவிருத்தி சங்க நிர்வாகிகளிடம் கையளித்து வைத்தார்.
இந்நிகழ்விற்கு தலைமை தாங்கி உரையாற்றிய நெற்புலவு மாதர் கிராம அபிவிருத்தி சங்க தலைவி திருமதி லூத்தம்மா அவர்கள் தளபாட தொகுதி வழங்கியமைக்கு நன்றி தெரிவித்ததுடன் மீள்குடியேற்றத்தின் ஆரம்பத்தில் எதுவுமற்ற நிலையிலிருந்த பூநகரி பிரதேச பொது அமைப்புகளுக்கு ஆரம்பகட்ட செயற்பாடுகளுக்காக டக்ளஸ் தேவானந்தா அவர்களால் தலா 10000/= வழங்கி வைக்கப்பட்டதை நினைவு கூர்ந்தார்.
இப்பத்தாயிரம் ரூபா நிதியுடன் மீள இயங்கத்தொடங்கிய தமது அமைப்பு இன்று 18 இலட்சம் ரூபா கையிருப்புடன் இயங்கி வருவதாகவும், இவ்வளர்ச்சியை ஆரம்பித்து வைத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு தமது கிராமம் சார்பான நன்றியையும் தெரிவித்துக்கொண்டார்.
தொடர்ந்து உரையாற்றிய மேற்படி அமைப்பின் பொருளாளரான திருமதி சுசீலாதேவி அவர்கள் தமது பிரதேசத்தின் தேவைப்பாடுகளான வீட்டுத்திட்டம், வீதி அபிவிருத்தி, தெரு மின்விளக்கு பொருத்துதல்,மாதர்சங்க கட்டடம் புனரமைப்பு, இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு என்பவற்றை பெற்றுக்கொடுப்பதற்கும் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் உதவி செய்ய வேண்டும் என்று திரு தவநாதன் அவர்களிடம் கோரிக்கைகளை முன்வைத்தார்.
இதற்கு பதிலளித்த தவநாதன் அவர்கள் தமக்கு கிடைத்த அதிகாரத்தை வைத்து அதிக மக்கள் பணிகளை தாம் செய்துள்ளோம் என்றும் மேலும் அதிகாரம் கிடைக்கும் பட்சத்தில் மக்களுக்கான சேவையை மேலும் விரிவுபடுத்த முடியும் என்று தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஞானிமடம் வட்டார இணைப்பாளரான க.ஜெயக்குமார் (ரஞ்சன்), பள்ளிக்குடா வட்டார இணைப்பாளர் ந.எமேஷ்குமார் (ரமேஷ்) மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகளும் பொதுமக்களும் கலந்துகொண்டிருந்தனர்.
Related posts:
|
|