பூநகரி சோலைநிலா மக்களின் மின்விநியோகத்துக்கு பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை

Friday, May 13th, 2016

பூநகரி பல்லவராயன்கட்டு கிராமசேவகர் பிரிவின் கீழ்வரும் சோலைநிலா குடியிருப்பு பகுதி மக்கள்தமக்கான மின்விநியோகத்தை பெற முடியாத நிலையில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

போரின் பின்னரான மீள்குடியேற்றத்தையடுத்து 2012 காலப்பகுதியிலேயே தமது மின்விநியோகத்துக்கான பதிவை மேற்கொண்டு உரிய தொடர் பதிவிலக்கங்களை பெற்றிருந்த போதும் இதுகாலவரை மின்னிணைப்புக்களை இந்த மக்களால் பெறமுடியவில்லை என்பது கவலைதரும் செய்தியாகும்.

யாழ்குடாநாட்டின் வாதரவத்தை பிரதேசத்திலிருந்து 70களின் முற்பகுதியிலிருந்தே குடியேறிய இந்த குடும்பங்கள் தமது வாழ்வாதாரத்துக்காக அன்றாட கூலித் தொழிலையே நம்பியுள்ளன.

கடந்த ஜனாதிபதி ஆட்சியின் கீழான வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ்  இங்குள்ள வீதிகள் ஊடாக ஏனைய இடங்களுக்கு மின்சாரம் எடுத்து செல்லப்படுகின்ற போதும் அனைத்து வீடுகளும் மின் மானிகள் பொருத்தப்பட்டு ஒருவருடங்கள் கடந்துவிட்டபோதும் இந்த வீடுகளுக்கு இன்னும் மின்விநியோகம் கிட்டாமல் இருப்தென்பது இந்த மக்களை பொறுத்தவரை  தமது நிலமையை எண்ணி நாள்தோறும் மனம்வேதனைப்படும் ஒரு விடயமாக இப்பிரச்சினை இருந்து வருவதையும் இங்கே குறிப்பிட வேண்டும்.

கடந்த பாராளுமன்ற தேர்தலுக்கு பின்னர் முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தாவை இப்பகுதி மக்கள் கடந்த வாரம் தொடர்பு கொண்டு தமது நிலமையை தெளிவுபடுத்தியதை அடுத்து இக்குடியிருப்பு பகுதி மக்களுக்காக இலவச  மின்னிணைப்பை பெற்று  கொடுப்பதற்கான நடவடிக்கைகளை  மேற்கொண்டுள்ளார்.

Related posts: