பூநகரியில் பாரிய புலம்பெயர் முதலீடு – கிளி. ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் கலந்தாய்வு!

Friday, March 5th, 2021

பூநகரி, கௌதாரிமுனையில் புலம்பெயர் முதலீட்டாளரினால்  சுமார் 30 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டினை மேற்கொள்ளவதற்கு தேவையான காணிகளை வழங்குமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், தேவையான ஆய்வுகளை மேற்கொண்டு காணியை வழங்குவது தொடர்பான தீர்மானத்தினை மேற்கொள்வதற்கு விசேட குழு அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வடக்கு கிழக்கு மக்களை பொருளாதார ரீதியாக பலப்படுத்துவதற்கு புலம்பெயர் உறவுகள் முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் முன்வைத்துள்ள  நிலையில், சம்மந்தப்பட்ட தனியார் முதலீட்டாளர் ஒருவர் குறித்த பாரிய முதலீட்டை மேற்கொள்ள  முன்வந்துள்ளார்.

குறித்த திட்டத்தில் சர்வதேச தரத்திலான உள்ளக விளையாட்டு கட்டிடத் தொகுதி ஒன்றும் இயற்கை சூழலை மையப்படுத்திய சுற்றுலாத்தளம் ஒன்றும் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் ஊடாக 300 இற்கும் மேற்பட்ட உள்ளூர் மக்களுக்கு நேரடியான வேலைவாய்ப்புக் கிடைக்கவுள்ளதுடன், ஏராளமான மறைமுகமான வேலைவாய்ப்புக்களும் உருவாக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: