பூநகரியின் ஒரு பகுதிக்கான போக்குவரத்து முற்றாகத் தடை!

Thursday, December 27th, 2018

வெள்ள இடர் காரணமாகப் பூநகரிப் பிரதேசத்தில் கிராஞ்சி, வலைப்பாடு, பல்லவராயன்கட்டு, பாலாவி, பொன்னாவெளி ஆகிய கிராமங்களுக்கான முதன்மை வீதியை வெள்ள நீர் மேவிப் பாய்கின்றமையால் அந்தப் பகுதிக்கான போக்குவரத்து முற்று முழுதாகத் தடைப்பட்டுள்ளது.

வடபகுதியில் பெய்துவரும் கனமழை வெள்ளப்பெருக்குக் காரணமாக கிளிநொச்சி, முல்லைத்தீவு பகுதிகளைச் சேர்ந்த மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். பல குடும்பங்கள் இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியுள்ளதுடன் மழை இடையிடையே தொடர்ந்து பெய்த வண்ணமுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts: