புளியம்பொக்கணை ஆலயத்துக்கு இ.போ.சபையின் சிறப்புச் சேவை!

Monday, August 13th, 2018

புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலயத்துக்காக இலங்கைப் போக்குவரத்து சேவை கிளிநொச்சியில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

கடந்த இரு தினங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கைப்போக்குவரத்துச் சங்கத்தின் பேருந்து காலை 9.15 மணியளவில் கிளிநொச்சியில் ஆரம்பித்து புளியம்பொக்கணை சந்தியை காலை 9.45 மணிக்குச்சென்றடைந்து கோயிலை காலை 10 மணிக்கு சென்றடைந்து அங்கிருந்து திரும்பவும் கிளிநொச்சி நோக்கிப் புறப்படும் மதியம் 1.15 மணிக்கு கிளிநொச்சியில் இருந்து பயணத்தை ஆரம்பிக்கும் பேருந்து மதியம் 2 மணிக்குக் கோயிலை சென்றடைந்து மீளவும் கிளிநொச்சி நோக்கிப் புறப்படும்.

புளியம்பொக்கணை சந்தியில் இருந்து கோயிலுக்குச் செல்வதால் முச்சக்கர வண்டிகளுக்கு ரூபா 200 தொடக்கம் ரூபா 250 வரை பணம் செலுத்தியே பக்தர்கள் செல்ல வேண்டி உள்ளது. இந்தச் சேவை மூலம் அவை நிவர்த்தி செய்யப்பட்டு அதிகமானவர்கள் கோயிலைத் தரிசிப்பதற்கான ஏற்பாடுகள் செய்மு கொடுக்கப்பட்டுள்ளது.

Related posts: