புலோலி பாடசாலைக்கு அருகில் மிதிவெடி!

புலோலி மெதடிஸ்த மிசன் தமிழ் கலவன் பாடசாலைக்கு அருகில் மிதிவெடியொன்று நேற்று (21) மீட்கப்பட்டுள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நிலத்தில் ஓரளவு புதையுண்ட நிலையில் காணப்பட்ட இந்த மிதிவெடியை, அவ்வழியே சென்றவர்கள் அவதானித்து பருத்தித்துறை பொலிஸாரின் கவனத்துக்குக் கொண்டு வந்தனர். இதனையடுத்து, விசேட அதிரடிப் படையினருடன் அவ்விடத்துக்குச் சென்ற பொலிஸார், மிதிவெடியை மீட்டனர். விசேட அதிரடிப் படையினரால் மிதிவெடி செயலிழக்கச் செய்யப்பட்டது.
Related posts:
நாளைவரை க.பொ.த சாதரண தர மாணவர்களுக்கு இறுதி சந்தர்ப்பம்!
கட்டுப்பாடுகளை தளர்த்துவதன் மூலம் வைரஸ் பரவலின் ஆபத்து நீங்காது - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!
நாடாளுமன்ற நூலகத்தில் கடந்த வருடம் 330 நூல்கள் மாத்திரமே பெறப்பட்டுள்ளன – சபாநாயகர் தகவல்!
|
|