புலோலி – கொடிகாமம் – கச்சாய் வீதிக்கான காப்பற் செப்பனிடும் பணி நிறைவுக் கட்டத்தில் !

Wednesday, March 17th, 2021

வடமராட்சியையும் தென்மராட்சியையும் இணைக்கும் AB 31 நீள் சாலையான புலோலி – கொடிகாமம் – கச்சாய் விதி காப்பற் செப்பனிடும் பணி கொடிகாமத்தில் முடிவு நிலையை அண்மித்துள்ளன.

இந்திய நிறுவனம் ஒன்றால் கடந்த 2019 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த வீதிக்கான செப்பனிடும் பணிகள் நடைபெறு வந்த நிலையில் தற்போது முடிவு கட்டத்தை அடைவது மகிழ்ச்சி அளிப்பதாக வடமராட்சி மற்றும் தென்மராட்சி மக்கள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக வடமராட்சியிலிருந்து வெளிமாவட்டங்களுக்கான போக்குவரத்து இந்த வீதி செப்பனிடப்படுவதால் இலகுவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள குறித்த இரு பகுதிகளினதும் மக்கள் பருத்தித்துறையிலிருந்து வெளிமாவட்டங்களுக்கான பொதுப் போக்குவரத்து நடைபெற்றுவரும் நிலையில் குறித்த வீதி செப்பனிடப்படாமல் இருந்த காரணத்தால் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுவதாகவும் சுட்டிக்காட்டியிருந்தனர்.

இதனிடையே இலங்கையில் A தரத்திலான நெடுஞச்சலைகளுக்கு அடுத்த தரத்தில் இருப்பவை AB தர நீள் சாலைகளாகும். அந்தவகையில் குறித்த AB தர நீள் சாலைகள் நாட்டில் யாழ் மாவட்டத்தில்தான் அதிகமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: