புலம்பெயர் தொழிலாளர்களுக்கு நேரடி வேலை வாய்ப்பை வழங்குவதற்கு மொஸ்கோ தீர்மானம்!
Saturday, August 12th, 2023மொஸ்கோவில் உள்ள இலங்கைத் தூதரகம், முதன்முறையாக ரஷ்ய கூட்டமைப்பில் உள்ள இலங்கை திறன்மிக்க புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு நேரடி வேலை வாய்ப்புகளை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இலங்கையின் முழு அரச நிறுவனமான இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவரகத்துடன் (SLFEA) இணைந்து வேலை வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன.
இலங்கையின் திறமையான தையல்காரர்களுக்கு மேலும் 700 வேலை வாய்ப்புகளை வழங்குவதற்காக Nizhny Novgorod இல் உள்ள பிராந்திய அரசாங்க அதிகாரிகளுடன் முறையில் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாகவும் தூதரகம் தெரிவித்துள்ளது.
மேலும்,, பல தொழில்நுட்ப வகைகளின் கீழ், ரஷ்ய கூட்டமைப்பு மற்றும் அங்கீகாரம் பெற்ற பிற நாடுகளில் உள்ள இலங்கை தொழிலாளர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கான பொறிமுறையை மொஸ்கோவில் உள்ள இலங்கைத் தூதரகம் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|