புலம்பெயர் தமிழர்களின் பேராதரவுடன் ஈ.பி.டி.பியின் தேசிய எழுச்சி மாநாடு!

Tuesday, March 8th, 2016
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினால் நடாத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ள தேசிய எழுச்சி மாநாட்டுக்கு புலம்பெயர்வாழ் தமிழர்கள் தமது மகிழ்ச்சியையும் வரவேற்பையும் தெரிவித்து வருகின்றனர்.
இவ்வருடம் நடுப்பகுதிக்குள் திட்டமிட்டபடி ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தேசிய எழுச்சி மாநாடு மிக பிரமாண்டமான வகையில் நடைபெறுவதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் பிரதேச மாவட்ட மாகாண மட்டங்களில் முன்னெடுக்கப்படுகின்றன.
25 வருடங்களை கடந்து மக்கள் நலன்சார்ந்த சேவைகளுக்காக தோழர்களின் விலைமதிக்க முடியாத உயிரிழப்புகளையும், பல்வேறுபட்ட இன்னல்கள், துன்ப துயரங்கள், இடையூறுகளை எதிர்கொண்டும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி மக்கள் சேவையை தமது தலையாய கடமையாகக் கொண்டு இற்றைவரை முன்னெடுப்பதில் அயராது உழைத்து வருகின்றது.
நாட்டில் நிலவிய அழிவு யுத்தத்தின் போது அழிவடைந்த எமது பகுதிகளை தமது சிறந்த மதிநுட்பமான சிந்தனையின் ஊடாகவும், செயற்திறன் ஊடாகவும் இணக்க அரசியலைப் பயன்படுத்தி மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவதற்கு வித்திட்ட பெருமை டக்ளஸ் தேவானந்தா அவர்களையே சாரும். அதுவே யதார்த்தமுமாகும்.
இதுபோன்ற செயற்பாடுகள் மேலும் தொடரப்பட வேண்டும் என்பதே மக்களினதும் எங்களினதும் பெருவிருப்பாகும்.
குறிப்பாக கடந்த காலங்களில் எமது மக்களின் வாழ்வாதார பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் மிகுந்த கரிசனையுடனும் அக்கறையுடனும் உழைத்த சிறந்த தமிழ் அரசியல் தலைமையைக் கொண்டுள்ள ஒரே அமைப்பாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி மட்டுமே விளங்கி வருகின்றது என்றால் அது மிகையாகாது.
அபிவிருத்தியையும் அரசியல் உரிமையையும் வென்றெடுக்கும் திடசங்கற்பத்துடன் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களது சிறந்த தலைமைத்துவத்துடனான வழிகாட்டல் கட்சிக்கு மட்டுமன்றி மக்களுக்கும் மேலும் பலம் சேர்க்கும் ஒரு வரப்பிரசாதமாகவும் அமைந்துள்ளது.
காலம் எமக்குத் தந்த பொக்கிஷமாகவும் வாழும் வரலாற்றின் நாயகனாகவும் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் விளங்கிவரும் நிலையில் அவரது தலைமையிலான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி இவ்வருடம் தேசிய எழுச்சி மாநாட்டை நடாத்தத் தீர்மானித்துள்ளமைக்கு புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழர்களாகிய நாம் பெருமிதமடைகின்றோம்.
அத்துடன் நடைபெறவுள்ள தேசிய எழுச்சி மாநாடு வெற்றி பெறவும் நாம் எமது ஆதரவையும் பங்களிப்பையும் நல்கும் அதேவேளை எமது மனம் நிறைந்த வாழ்த்துக்களையும் மகிழ்ச்சியையும் தெரிவித்து வருகின்றனர்.

Related posts: