புலமை பரிசில் பரீட்சை விடைத்தாள்கள் திருத்தும் பணி நாளை ஆரம்பம் – பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு!

Wednesday, October 21st, 2020

நடந்து முடிந்த 5 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் நாளை 22 ஆம் திகதிமுதல் ஆரம்பிக்கப்பட உள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாளைமுதல் எதிர்வரும் 27 ஆம் திகதிவரை 39 மத்திய நிலையங்களில் இப்பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளது.

அத்துடன் அனைத்துப் பரிசோதகர்களுக்கும் விடைத்தாள் திருத்தும் பணிகளுக்கு வருகை தருமாறு குறுஞ்செய்தி ஊடாக தகவல் வழங்கப்பட்டுள்ளது.

கம்பஹா மாவட்டம் மற்றும் குளியாப்பிட்டிய கல்வி வலயத்தை தவிர்ந்த ஏனைய பகுதிகளில் விடைத்தாள் திருத்தும் பணிகள் நாளையதினம் ஆரம்பிக்கப்படவுள்ளது.

நாட்டில் நிலவும் கொரோனா அச்சநிலை காரணமாக ஏதாவது பிரச்சினைகள் ஏற்படின் 011 2 785 231 , 011 2 785 216, 011 2784 037 என்ற இலக்கங்களுக்கு அழைப்பு விடுக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: