புலமைப் பரிசில் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் நிறைவு!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2018/09/exam1.jpg)
தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள்கள் மதிப்பீட்டு பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும், தற்போது பெறுபேறுகள் தொடர்பான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக, பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற உயர்தர பரீட்சை விடைத்தாள்கள் மதிப்பிடும் முதலாம் கட்ட பணிகள் நேற்று முன்தினத்துடன் (01) நிறைவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இம்முறை 05ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் 3,55,326 மாணவர்கள் தோற்றினர். இதில், 87,556 மாணவர்கள் தமிழ் மொழி மூலம் தோற்றியிருந்தனர்.
புலமைப் பரிசில் பரீட்சை விடைத்தாள்களை மதீப்பீட்டு பணிகள் கடந்த 15ஆம் திகதி தொடக்கம் 21ஆம் திகதி வரை 428 மதிப்பீட்டு சபைகளின் கீழ் முன்னெடுக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
அத்துடன், உயர்தரப் பரீட்சை விடைத்தாள் முதற் கட்ட மதிப்பீட்டு பணிகள் கடந்த 23ஆம் திகதியிலிருந்து, இந்த மாதம் 5ஆம் திகதி வரை 37 பாடசாலைகளில் முன்னெடுக்கப்படுவதுடன், இதனால் குறித்த 37 பாடசாலைகளும் எதிர்வரும் 6ஆம் திகதியே மூன்றாம் தவணைக்காக திறக்கப்படவுள்ளது.
Related posts:
|
|