புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் 2 வாரங்களில் வெளியாகும் – கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன அறிவிப்பு!

Wednesday, March 2nd, 2022

5ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் 2 வாரங்களில் வெளியாகும் என அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

வழமையாக வருடத்தின் ஆகஸ்ட் மாதம் நடைபெறும் 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை, கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த வருடத்தில் பல முறை பிற்போடப்பட்டிருந்தது.

இதனையடுத்து குறித்த பரீட்சை கடந்த ஜனவரி மாதம் 22ஆம் திகதி இடம்பெற்றிருந்தது.

இந்நிலையில், இப்பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் கடந்த ஜனவரி 31ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு பெப்ரவரி 5ஆம் திகதி வரை இடம்பெற்றிருந்தது.

இந்த முறை இடம்பெற்ற 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் 340, 508 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்த நிலையில், 2,943 பரீட்சை நிலையங்களில் இப்பரீட்சை இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: