புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இம்மாதம் வெளியீடு!

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளை ஒக்டோபர் 15 ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
விடைத்தாள் திருத்தும் பணிகள் இறுதிக்கட்டதை எட்டியுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யூ.எம்.என்.ஜே. புஷ்பகுமார குறிப்பிட்டார். தற்போது பரீட்சை பெறுபேறுகளை கணனி மயப்படுத்தும் பூர்வாங்க நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இம்முறை தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில், 350700 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர். நாடு முழுவதும் 2959 நிலையங்களில் பரீட்சை இடம்பெற்றது.
Related posts:
யாழ்.மாவட்டத்தில் அதிக விலைக்கு பொருட்களைவிற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக பாவனையாளர் அதிகாரச...
கிரிக்கெட் தவிர ஏனைய விளையாட்டுகளின் வளர்ச்சிக்கு உறுதுணை வழங்கப்படும் - இலங்கைக்கான பிரித்தானிய உயர...
ஜூன் மாதத்தில் 16,000 க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருகை - சுற்றுலா அபிவிருத்தி அதிகார ச...
|
|