புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் அடுத்த வாரம் வெளியிடப்படும் – பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு!
Wednesday, November 15th, 20232023 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை அடுத்த வாரம் வெளியிட திட்டமிட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
2023 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளுக்கான ஆவணங்களைத் தயாரிக்கும் பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இந்தப் பணிகள் நிறைவடைந்தவுடன், அடுத்தவாரம் பெறுபேறுகளை வெளியிட திட்டமிட்டுள்ளதாக குறித்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
3 இலட்சத்து 37 ஆயிரத்து 591 மாணவர்கள் இம்முறை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றியிருந்தனர்.
2 ஆயிரத்து 888 பரீட்சை மத்திய நிலையங்களில் இவர்களுக்கான பரீட்சை நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
நாடாளுமன்ற அமர்வு தொடர்பில் வர்த்தமானி !
எச்சரிக்கை: எந்த அறிகுறிகளும் இல்லாமல் 1,300 பேருக்கு கொரோனா தொற்று - சீனா வெளியிட்டுள்ள அதிர்ச்சி த...
இலங்கையின் திறமையான பணியாளர்களின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரிப்பு - கொரிய குடியரசின் தொழிலாளர் மற்ற...
|
|