புலமைப்பரிசில் பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி – சுகாதார நடைமுறைகளை உரிய வகையில் பின்பற்றுமாறும் பரீட்சை ஆணையாளர் வலியுறுத்து!

சுகாதார வழிக்காட்டல்களுக்கமைய எதிர்வரும் 22 ஆம் திகதி ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையை நடத்துவதற்கான சகல ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்தமுறை 2 ஆயிரத்து 943 மத்திய நிலையங்களில் இடம்பெறவுள்ள ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்காக 3 இலட்சத்து 40 ஆயிரத்து 508 மாணவர்கள் தோற்றவுள்ளனர்.
அத்துடன் பரீட்சை இணைப்பு நடவடிக்கைகளுக்காக 496 மத்திய நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாகவும் பரீட்சை திணைக்களம் குறிப்பிட்டுள்ளது..
இந்த பரீட்சையின்போது, சுகாதார நடைமுறைகளை உரிய வகையில் பின்பற்ற சகல மாணவர்களும், ஆசிரியர்களும், மண்டப பொறுப்பாளர்களும், செயற்குழுவினரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எம்.எல்.டீ தர்மசேன வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வெளிநாடுகளில் தொழில்புரிவோரின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில் !
இலாபம் ஈட்டும் நிறுவனமாக இலங்கை போக்குவரத்துச் சபை உருவாகியுள்ளது - பிரதி போக்குவரத்து அமைச்சர்!
கட்டட நிர்மாண வேலையில் ஈடுபட்டிருந்த ஒருவருக்கு கொரோனா – முழுமையாக முடக்கப்பட்டது மன்னார் ஆயர் இல்லம...
|
|