புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளி முறையற்ற வகையில் அதிகரிக்கப்படவில்லை – கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் தெரிவிப்பு!

Friday, February 12th, 2021

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேற்றின் அடிப்படையில் 2021 ஆம் ஆண்டுக்கு பாடசாலைகளில் மாணவர்களை இணைத்துக் கொள்வதற்காக வெளியிடப்பட்டுள்ள வெட்டுப்புள்ளி முறையற்ற வகையில் அதிகரிக்கப்படவில்லை என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

தரம் 5 மாணவர்களின் பரீட்சையில் வெட்டுப்புள்ளி தொடர்பில், நிலையியல் கட்டளை 27/2 இன் கீழ் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் நாடாளுமன்றத்தில் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் மாணவர்களின் ஆற்றல் திறமையின் அடிப்படையில் இந்த வெட்டுப்புள்ளி தீர்மானிக்கப்படுவதாக அமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.

அத்துடன் குறித்த வெட்டுப்புள்ளி உரிய விதிமுறைகளுக்கு அமைவாக மேற்கொள்ளப்படுவதை அமைச்சர் இதன் போது விபரித்தார்.

இந்த பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் வெளிப்படுத்தியுள்ள திறமையின் அடிப்படையில் இந்த புள்ளி தீர்மானிக்கப்பட்டதாகவும் 20 0க்கு 200 புள்ளிகளை பெற்ற மாணவர்கள் 10 பேர் இருப்பதாககவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேநேரம் அடுத்த வருடத்தில் இந்த புள்ளியில் மாற்றம் ஏற்படக்கூடும். 200 க்கு 200 புள்ளிகளை பெற்ற மாணவர்களை கல்வி அமைச்சுக்கு அழைத்து மடிக்கணனிகளை வழங்குவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறு புள்ளிகளை குறைப்பதற்கான கோரிக்கை இந்த மாணவர்களுக்கு மேற்கொள்ளப்படும் அநீதியாகும் என்றும் அமைச்சர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: