புற்றுநோய் மருந்து வகைகளின் விலைகள் கட்டுப்பாட்டல்!

Wednesday, May 16th, 2018

எதிர்வரும் தினங்களில் புற்று நோய்க்காக வழங்கப்படுகின்ற மருந்து வகைகளின் விலைகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கை, மேற்கொள்ளப்படும் என்று சுகாதார போசாக்குமற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

மேலும் தனியார் வைத்தியசாலைகளில் அறவிடப்படும் கட்டணங்களை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

புற்று நோயினால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 15 இலட்சம் ரூபா வரை வரையறுக்கப்பட்ட செலவானது  தற்பொழுது நீக்கப்பட்டுள்ளது. புற்றுநோயாளர்கள் இறப்பது நோயினால் அல்ல நோய்க்கான சிகிச்சைக்கு செலவிடுவதற்கு பணம் இன்மையே என்று அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.


உள்ளூராட்சி தேர்தல்: மே மாதத்தில் நடக்கலாம் என்கிறார் மஹிந்த தேசப்பிரிய!
இலங்கை – சீனா  இடையே புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம்!
பங்களாதேஷ் தேசிய பாதுகாப்பு கல்லூரி குழு - இராணுவதளபதி சந்திப்பு!
டிஜிட்டல் மயமாக்கும் திட்டத்தில் 250 முன்னணி பாடசாலைகள் தெரிவு!
ட்ரோன் உள்ளிட்ட விமானியில்லா கருவிகளை பறக்க விடத் தடை - சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபை!