புற்றுநோய் மருந்து இறக்குமதியில் பெரும் மோசடி : ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு விசாரணைகள் ஆரம்பம்!

Friday, March 1st, 2019

மஹரகம புற்றுநோய் மருத்துவமனைக்கு புற்றுநோயை தடுக்கும் இரண்டு வகையான மருந்துகள் இறக்குமதி செய்யப்படும் போது 3.8 பில்லியன் ரூபாய் மோசடி இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் முறைப்பாடு தொடர்பில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இலங்கை சிறிய மற்றும் நடுத்தர அளவான தொழில்முனைவோர் சங்கத்தினால், இலங்கை மருந்தக கூட்டுத்தாபனத்திற்கு எதிராக அந்த ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு நேற்றைய தினம் அதன் தலைவர் ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி உபாலி அபேரதன்வின் தலைமையில் கூடியது.

இதன்போது குறித் முறைப்பாடு தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Related posts: