புறக்கோட்டை அத்தியாவசிய மொத்த வர்த்தக நிலையங்களை திறக்குமாறு வர்த்தகத்துறை அமைச்சர் கோரிக்கை!

Wednesday, August 18th, 2021

நாட்டு மக்களின் நன்மைக் கருதி புறக்கோட்டை அத்தியாவசிய மொத்த வர்த்தக நிலையங்களை தொடர்ந்தும் திறந்து செயற்பாடுகளை முன்னெடுத்து செல்லுமாறு வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன கோரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனா வைரஸ் காரணமாக பல்வேறு நகரங்களின் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு வரும் நிலையில், அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

முழு நாட்டிற்கும் தேவையான அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்து விநியோகிக்கும் மையமாக புறக்கோட்டை மொத்த வியாபார சந்தை செயற்படுகின்றது.

இறக்குமதிகள் நிறுத்தப்படுவதாலும் துறைமுக சேவைகள் இடைநிறுத்தப்படுவதாலும் இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் தேங்கியிருக்கும் சூழல் உருவாகும்.

இதனால், நாட்டில் அத்தியாவசிய பொருட்களுக்கான கேள்வி அதிகரித்து அதன் விலைகள் சடுதியாக உயர்வடையும் நிலையும் ஏற்படும்.

எனவே அத்தியாவசிய சேவைகள் கட்டாயம் முன்னெடுக்கப்பட வேண்டியதொன்றாகும்.

விருப்பத்தின் அடிப்படையில் எந்தவொரு வர்த்தக நிலையத்தையும் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், அத்தியாவசிய வர்த்தக நிலையங்கள் திறந்திருக்க வேண்டும் என வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

Related posts: